தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐந்து பேர் மீது துப்பாக்கிச்சூடு!இருவர் கைது

5 நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி பாரிய காயங்களை ஏற்படுத்திய சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பட்டபொல-பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரியகாலதொல பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி  கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த 5 ​பேர் மீது துப்பாக்கிப் பிர​யோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் கடந்த 5ஆம் திகதி இரவு 8 மணியளவில் தெல்வத்த பிரதேசத்தில் வைத்து கைதுசெயய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 36 மற்றும் 27 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்கள் பயன்படுத்திய 56 ரக துப்பாக்கி மற்றும் மெகசீன்-1,துப்பாக்கி ரவைகள் 6 ,மோட்டார் சைக்கிள்கள் 2 என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார்  சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்றைய தினம்(6) பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments
Loading...