Designed by Iniyas LTD
கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்வு…
கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பட்டி கவுண்டி பகுதியில் உள்ள பாரடைஸ் நகரத்தில் உள்ள காட்டுப் பகுதியில்தான் காட்டுத் தீ பரவியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள 1,35 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுப் பகுதி உள்ளது.
அங்கு தற்போது காட்டுத் தீ பரவி அணைக்க முடியாத அளவில் பற்றி எரிகின்றதாகவும் கூறப்படுகின்றது.
பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,011 உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் எரிந்து நாசமான வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கலிபோர்னியாவில் சேதங்களைப் பார்வையிட அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

