தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பில் ஜெனிவாவிற்கு செல்ல முற்பட்ட தாயாரின் விசா அனுமதிமறுப்பு..

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பில் ஜெனிவாவிற்கு செல்ல முற்பட்ட வவுனியாவை சேர்ந்த  தாயார் ஒருவருக்கு  விசா  வழங்க தூதரகங்கள்  அனுமதிமறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவைச்சேர்ந்த திருமதி.. சண்முகம்பிள்ளை சறோஜா எனும் தாயாரின் அனுமதியே இவ்வாறு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் இராணுவத்தின் மருத்துவமனையில் இருந்த தனது பிள்ளை அதன் பின் இராணுவத்தின் முகாங்களில் இருந்ததாக  கூறியுள்ளார்.

ஆனால்  தற்பொழுது  தனது பிள்ளை எங்கே அரசாங்கம் ஏன் பொய்சொல்லுகிறது. என்பதை ஐ.நா அமர்வில் கூறி தனது பிள்ளையின் தீர்வைப்பெறலாம் என எண்ணி ஐ.நா அமர்விற்கு செல்லமுற்பட்டபோது ஸ்ரீலங்காவில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அவரின்  பயண அனுமதியினை  மறுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் தூதரகங்கள்  ஸ்ரீலங்கா அரசுக்கு சாதகமாக செயற்படுகின்றதாக ஊடகங்களிற்கு வழங்கிய செவ்வியில் அவர்  வவுனியாவைச்சேர்ந்த திருமதி.. சண்முகம்பிள்ளை சறோஜா அவர்கள் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது….

Comments
Loading...