தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காவிரி பிரச்சனைக்கு நதிகளை இணைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் : இல.கணேசன்

ganesan_jpg_1590008gநதிகளை இணைப்பதன் மூலமே காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நதிகளை இணைப்பதன் மூலமே காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதற்காக மத்திய அரசு நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இரு மாநிலங்களில் அதிக மழை பெய்வதன் மூலமே தற்போது இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் நல்லுறவை கொண்டுள்ளது. தேவைக்கு அதிகமாகவே மத்திய அரசு தமிழகத்தின் பிரச்னைக்கு கவனம் செலுத்தி வருகிறது.

ஊழல்கள் இல்லா வண்ணம் மகாத்ம காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்.

மத்திய அரசு அறிவித்துள்ள கல்வி கொள்கை வரவேற்கதக்கது. இது பாரதத்தின் மண்வாசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Comments
Loading...