தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 14 பேருக்குச் சொந்தமான 21.24 ஏக்கர் காணிகள் இன்று அதன் உரிமையாளர்களிடம் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வழங்கி வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.

குறித்த காணிகளை இன்று (07) அதன் உரிமையாளரிடம் கையளிக்கின்ற நிகழ்வு 10.00 மணிக்;கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றுள்ளது இதில் படையின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணி அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 39.95 ஏக்கர் காணிகளில் மேற்படி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள போதும் மேலும் 18.71 ஏகக்கர் காணி இன்னமும் கையளிக்கப்படவேண்டியுள்ளமை குற்ப்பிடத்தக்கது.

Comments
Loading...