Designed by Iniyas LTD
கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக எஸ்.வியாலேந்திரன் – கட்சி தாவலிற்கு 48 கோடி….
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்
நிலழ்வில் ஐ. தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி நாவின்ன கலாசார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
புளொட் அமைப்பினைச் சேர்ந்த வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தலில் போட்டியிட்டவர்
இதேவேளை வியாழேந்திரனின் கட்சி தாவலிற்கு 48 கோடி கைமாறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.