Designed by Iniyas LTD
குளிர்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற புதன்கிழமை முடியவுள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திவால் ஆகக்கூடிய நிறுவனங்களை முன்கூட்டியே அறிந்து மறுசீரமைக்க வகை செய்யும் மசோதா, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்கான மசோதா ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. விமானக் கடத்தலைத் தடுக்கும் மசோதா, அணுசக்தி திருத்த மசோதா ஆகியவற்றையும் இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
நிலப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் போக்குவரத்துக்கான மசோதாவை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்யவுள்ளார். இதுதவிர, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு திருத்த மசோதா, ஊழலை வெளிப்படுத்துவோரை பாதுகாக்கும் மசோதா, சிறார் குற்றவாளிகள் திருத்த மசோதா ஆகியவற்றையும் இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.