Designed by Iniyas LTD
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இடைத்தேர்தலுக்கு பின் தொடங்கப்படும்: வெங்கையா நாயுடு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவு சாதனை விளக்க நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், இந்திய சட்டத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.
மேலும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது, அண்டை நாடுகளுடன் மோதல், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட தீர்க்கப்படாத விவகாரங்கள் இந்தியாவுக்கு இருந்ததாகவும, ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இடைத்தேர்தல் முடிந்த பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.