Designed by Iniyas LTD
ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது என்கிறார் – எம்.ஏ சுமந்திரன்…
ஜனாதிபதி மைதிரிபல சிறிசேனவின் செயற்பாடு சட்டவிரோதமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அவை பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (02) காலை கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியலமைப்பு திட்டத்திற்கு மாறாக ஜனாதிபதி கடந்த 26ஆம் திகதி புதிய பிரதமரை நியமித்தது சட்டவிரோதமானது என்ற விடயம் இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு , நாடாளுமன்றத்தினை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்தமை சட்டவிரோதமானது என்பதால் , உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் யாரிற்கு ஆதரவு வழகுவது தொடர்பில் தீர்மானம் எவையும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை எனவும் எம்.ஏ சுதந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..