தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜப்பானில் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 179ஆக உயர்வு…

வரலாறு காணத அளவிற்கு ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் உள்ள ஒக்கயாமா,எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் மழை வெள்ளத்தாலும்,மண்சரிவினாலும் 179 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் பலர் காணமல் போயுள்ள நிலையில் ,அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...