தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெல்லியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டேர்டெவில்ஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீசியது.

வாட்சன், டு பிளெஸ்ஸி இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர்.

ஒரு முனையில் டு பிளெஸ்ஸி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய வாட்சன் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார்.

அவர் 25 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் அரை சதம் அடித்தார். வாட்சன் – டு பிளெஸ்ஸி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

டு பிளெஸ்ஸி 33 ரன் எடுத்து (33 பந்து, 3 பவுண்டரி) விஜய் ஷங்கர் பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 1 ரன் மட்டுமே எடுத்து மேக்ஸ்வெல் சுழலில் பலியானார்.

வாட்சன் 78 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி மிஷ்ரா பந்துவீச்சில் பிளங்கெட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ராயுடு – கேப்டன் டோனி ஜோடி கடைசி கட்டத்தில் ருத்ரதாண்டவமாட, சிஎஸ்கே ஸ்கோர் வேகம் எக்கச்சக்கமாய் எகிறியது.

இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் டேர்டெவில்ஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர். ராயுடு 41 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார்.

ஆட்ட நாயகன் _  ஷேன் வாட்சன்

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. டோனி 51 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), ஜடேஜா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி அணி பந்துவீச்சில் ஷங்கர், மிஷ்ரா, மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டேர்டெவில்ஸ் களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து தோற்றது.

ரிஷப் பந்த் அதிகபட்சமாக 79 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். விஜய் சங்கர் 54 ரன், காலின் மன்றோ 26 ரன் எடுத்தனர். சென்னை அணி பந்துவீச்சில் லங்கி இங்டி 2 விக்கெட் வீழ்த்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Comments
Loading...