தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தடகளப்போட்டியில் கிளி­நொச்சி மத்திய வித்தியாலயத்துக்கு தங்கப்பதக்கம்..

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துப் பெண்­கள் பிரிவு 800 மீற்­றர் ஓட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யம் தங்­கப்­ப­தக்­கம் வென்­றுள்ளது.

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ர் யாழ் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில்  இடம்­பெற்று வரு­கின்­றன.

நேற்று நடை­பெற்ற 20 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான 800 மீற்­றர் ஓட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம செய்த ரி.டென்­சிகா 2 நிமி­டங்­கள் 33 செக்­கன்­கள் 30 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்­துத் தங்­கப்­ப­தக்­கத்­தைத் தன­தாக்­கி­ உள்ளார்.

அதேவேளை முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.டிலக்­சனா 2 நிமி­டங்­கள் 36 செக்­கன்­கள் 50 மில்லி செக்­கன்­க­ளில் இலக்கை அடைந்து வெள்­ளிப்­ப­தக்­கத்­தை­யும்,

யாழ்ப்­பா­ணம் திருக்­கு­டும்­பக் கன்­னி­யர் மடத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஏ.ஆன் 2 நிமி­டங்­கள், 37 செக்­கன்­கள், 90 மில்லி செக்­கன்­க­ளில் இலக்கை அடைந்து வெண்­க­லப்­ப­தக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­யுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...