தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

stalinகாவிரி நதி நீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:-

காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாததால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வேண்டும் என்றும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அழைத்து பிரதமரை முதல்வர் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று பேரவையில் பேசினோம்.

ஆனால், முதல்வர் ஜெயலலிதா அது தொடர்பாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பிரதமருக்குக் கடிதம் மட்டும் எழுதியுள்ளார். திமுக விவசாய அணி மற்றும் சில அமைப்புகள் கர்நாடக முதல்வர் சீதாராமைய்யாவைச் சந்தித்து கோரிக்கைககள் விடுத்துள்ளன.

 கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார் அவர்.

Comments
Loading...