Designed by Iniyas LTD
தமிழில் தேசிய கீதம்! சந்தோசத்தால் நாகவிகாரைக்கு சென்ற விக்கி
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்ட விடயம் சந்தோசத்தை தருவதாகவும் அந்த சந்தோசத்தை கொண்டாடவே நாகவிகரைக்கு வந்ததாக வடக்கு முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தொடர்புடைய பதிவு
இன்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த நாகவிகரைக்கு சென்று பூசையில் ஈடுபட்டது தொடர்பாக முதலமைச்சர் மேற்கண்டவாறு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு அடியெடுத்து வைத்து தனது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினால் தன்னால் பத்தடி எடுத்து வைத்து தனது நல்லிணக்கத்தை வெளிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
