தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக மாவை சேனாதிராஜாவை சந்தித்துள்ள மூத்த போராளி…

தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக  முன்னாள் மூத்த போராளி மு. மனோகர் (காக்கா அண்ணா )இன்று  மாவை சேனாதிராஜாவின்  இல்லத்தில் அவரை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பின்போது   தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையை   அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்று நடத்துவது என்பது  பொருத்தமானது அல்ல என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதோடு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு  இவ் விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென காக்கா அண்ணா விடுத்த வேண்டுகோளை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

எம்மக்களுக்காக உண்ணா நோன்பிருந்து த்ன்னுயிரை ஈந்த திலீபன் நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸ் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும்,

அதற்கெதிராக சுமந்திரன் வாதாட இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் நல்ல நாடகம் அரங்கேறுவதாக  காக்கா அண்ணா தெரிவித்த கருத்தை அவர் நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை  கடந்த வருடம் இதே இடத்தில் களியாட்டமாக நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்றவரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின்  நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என காக்கா அண்ணா இதன்போது  சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின்போது அன்றைய நினைவு நிகழ்வின நிகழ்ச்சி நிரல் பற்றி மாவை சேனாதிராஜா கேட்டபோது அதை  நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக் காக்கா அண்ணா பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...