Designed by Iniyas LTD
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றிற்கும் அதிகமான பட்டதாரிகள் இணைந்துள்ளனர்.
வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த நிலையில், வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர்.
தொடர்புடைய பதிவு
என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற தமது போராட்டம் தொடரவுள்ளதாகவும், இதுவரை பல்வேறு வாக்குறுதிகளை கேட்டு ஏமாந்து போயுள்ளதால் இதுவே தமது இறுதி போராட்டம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டுமானால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்துமூலம் பதில் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.