தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நபர் ஒருவரை கடத்தி சென்று கப்பம்கோரிய நபர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது..

 குருநாகல் நாரம்பல பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி சென்று முல்லைத்தீவு சிலாவத்தைக்கு கடத்திசென்று  ஒருஇலட்சம் ரூபா கப்பம் கோரிய
  முகமட் ஜவ்வர் என்பவரை முல்லைத்தீவு பொலீசார் கைது செய்துள்ளார்கள்.
சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குருநாகல்பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரை 35 அகவையுடைய முகமட் ஜவ்வர் கடத்திசென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த  நபரை காணவில்லை என உறவினர்களால் குருநாகல் நாரம்பல பகுதி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய நாரம்பல பொலீசார் தேடுதல் மேற்கொண்ட நிலையில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்
இதனை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட பொருங்குற்றப்பிரிவு பொலீஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர்கள் நேற்று இரவு சிலாவத்தைபகுதியில் உள்ள முகமட் ஜவ்வரின்    வீட்டில்வைத்து அவரை  கைது செய்துள்ளனர்.
இதேவேளை  கைதுசெய்யப்பட்ட கடத்தல் காரனையும்,கடத்தப்பட்டவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...