தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்! ஒரு போராளியின் நினைவு.

பிரபல மார்க்ஸிஸ்ட் புரட்சியாளரான சே குவேரா கொலை செய்யப்பட்ட 50ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இவர் புரட்சிகளில் ஈடுபட்டதற்காக பொலியாவில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் திகதி அரச படையினரால் கைது செய்யப்பட்டார். அடுத்த நாளே அவரை பொலிவிய படையினர் கொலை செய்தனர்.

அவரது உடல் முதலில் பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் புதைக்கப்பட்டது. பின்னர் 1997ஆம் ஆண்டு அவரது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கியூபாவின் ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடத்தப்பட்டு பின்னர் சாண்ட்டா கிளாராவில் புதைக்கப்பட்டுள்ளது.சேகுவேரா சுய தியாகத்துக்கும், உறுதிப்பாட்டுக்கும் ஒரு முன் மாதிரியாக இருந்தார் என்று அவரது ஆதரவாளர்களும், அவர் கொடூரமானவர்கள் என்று அவரது விமர்சகர்களும் கருதுகின்றனர்.

முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களிடம் சென்று போராடி உயிர்விட்டு வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயரே “சே குவேரா.”பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு பதவிகளில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என கூறினார். கியூபா அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் சென்றார், இலங்கைக்கு வந்து தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர் என்றால் அது சே குவேரா. இப்படியாக உலகெல்லாம் கொண்டாடபட்ட சே குவேரா குறித்து, அமெரிக்காவிற்கு எரிச்சலூட்டியது. அதற்காக, எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பதுதான் சே குவேராவின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம். அப்படி சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா. இதற்காக சி.ஐ.ஏ களத்தில் இறங்கியது. சி.ஐ.ஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே குவேரா. சண்டை உச்சத்தை அடைந்தது. 1969ஆம் ஆண்டு, ஒக்டோபர் 8ஆம் திகதி மாலைப்பொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தபோது அங்கு ஆடுமேய்த்துகொண்டிருந்த பெண்மணியினை பார்த்தார். அந்தப் பெண்ணிடம் பரிதாபப்பட்டு பணம் கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார். அப்போது, அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது,”இது என்ன இடம், பள்ளி கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!” இதுதான் சே குவேரா. அவரை அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. அப்போது நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார். எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூப மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோக கடலில் ஆழ்த்தியது.அவரை சுட்டவீரன் சொன்னான், “முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு கை விரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசு பிரானை கண்முன் நிறுத்திற்று” என சொல்லி பின்னர் அழுதான். இலங்கையில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு. அது பெரிதாக வளர்ந்திருக்கின்றது. ஒன்றுமட்டும் உண்மை, சே குவேராவின் காலத்தில் காலத்தில் ஈழப் போராட்டம் தீவிரமடைந்திருந்தால், நிச்சயம் எம்மோடு இணைந்து கொள்ள சே குவேரா ஓடிவந்து முதல் ஆளாக நின்றிருப்பார்.

Loading...