யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன் ஒருவர் , தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா கலந்த சுருட்டுடன் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இதன்போதே தனக்கு நடந்த கொடுமைகளை தொடர்பில் குறித்த இளைஞர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்திருந்தமை மற்றும் அவரைத் தாக்கியமை தொடர்பில் , நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், கோப்பாய் பொலிஸாரைக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது