Designed by Iniyas LTD
போற்குற்றத்தில் இருந்து படையினரை நேர்மையோடு விடுவிப்போம்!
யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து எமது படையினரை விடுவிப்பதற்காக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அரசாங்கம் செயற்படும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் ஐந்து தடவைகள் முயற்சித்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் நேற்று முன்தினம் காலை 7.00 மணிக்கு இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
அண்மைக்காலத்தில் அரச தலைவர் ஒருவர் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் மேற்கொண்டவராக ஜனாதிபதி திகழ்கிறார்.
ஜனாதிபதியின் இவ் விஜயம் தொடர்பாக உயர் அதிகாரிகளைத் தவிர வேறு எவரும் அறிந்திருக்கவில்லை. இவரது நிகழ்ச்சியில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டில் தன்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் ஜனநாயகம் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவை தொடர்பில் அரசு என்ற ரீதியில் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.