Designed by Iniyas LTD
மனித சங்கிலி போராட்டத்தில் குதித்த தமிழக விவசாயிகள்
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்த தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று பிரம்மாண்ட மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற உள்ள இந்த பேரணியில் விவசாய நிலங்கள் வழியாக எரிகுழாய் பதிப்பது உள்ளிட்டவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த பேரணியில் பங்கேற்பதற்காக தமிழகம் எங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சியினருக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எனவே அனைத்துக் கட்சியின் பிரதிநிதிகளும் இந்த போராட்டத்திவ் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.