தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் பரபரப்பு தகவல்..

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மன்னாரில் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழு வெளியிட்டுள்ளது.

மன்னார் சதொச வளாகத்தில் மனித எச்சங்களை தேடும் பணிகள் நேற்றைய தினம்  13 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணியானது மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த அகழ்வுப் பணிகளில், இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்படுவதால், அது கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த மனித எச்சம் இரும்புகளால் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவரின் மனித எச்சமாக இருக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை சதொச வளாகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...