தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர்கள் தூக்குத்தண்டனை மேல்முறையீட்டிற்கான செலவை தமிழக அரசு பொறுப்பேற்கும்

தமிழக கடற்தொழிலாளர்கள் 5 பேர் போதைபொருள் கடத்தியதாக இலங்கை நீதிமன்றில்  தூக்குத்தண்டனை விதித்தது. அத்துடன் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றில் அறிவித்தது.fish

கடற்தொழிலாளர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள், மீனவர்கள் சங்கம், தமிழக அரசு, அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர் . குறித்த  விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மீனவர்களை மீட்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

5 அப்பாவி தமிழக கடற்தொழிலாளர்களை விடுதலை செய்திட வரும் திங்கட்கிழமை (10.11.2014) அன்று இலங்கை உச்சநீதிநீதிமன்றில் மேல்முறையீடு செய்வதற்கான நடாவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் ஆஜராவதற்கு சட்ட வல்லுநர் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு இன்று (8.11.2014) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  வழக்கின் தீர்ப்பாணை சிங்கள மொழியில் இருப்பதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வேலை நடைபெற்றது இதற்கிடையே மேல்முறையீட்டுக்கான செலவு அனைத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும். அதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . இந்தப் பணம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

Comments
Loading...