தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முகம் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய இலகுவான வழிகள்..

எல்லோரிற்குமே தங்களுடைய முகம் அழகாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை அதிகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.

என்னென்ன வழிமுறைகளை விட்டில் இருந்தபடியே செய்யலாம் என பார்க்கலாம்..

பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள்.  முகம் பளப்பளக்கும்.

பப்பாளிப்பழம், எலுமிஸ்சை சாறு கலந்து தடவவும்.  முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும்.  கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும்.  வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.

தர்பூசினி பழ்ச்சாறு, பயத்தம்மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.

தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும்.  கைகள் மிருதுவாக இருக்கும்.

இப்படி தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் நம் அழகுக்காக ஒதிக்கிவைத்தால், வயதனாலும் இளமையாக இருக்கலாம்.

Comments
Loading...