Designed by Iniyas LTD
முல்லைத்தீவில் 75 வருடம் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதான வீதியில் 75 வருடம் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் முல்லைத்தீவு- திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டிருந்தது
சிலாவத்தை பிரதான வீதியோரத்தில் காணப்படும் இந்த பெரிய ஆலமரம் நேற்று இரவு வீதியை குறுக்கருத்து முறிந்து விழுந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அங்கு சென்ற வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் முறிந்து விழுந்த ஆலமரத்தை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

