Designed by Iniyas LTD
முல்லைத்தீவு மாவட்ட மக்களிற்கு நிதியுதவி
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் 30 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. மீன்பிடி சமூக மக்களின் சமுதாய மீள்நிர்மாணம் என்பவற்றிற்காக இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. உதவி, ஜப்பானிய அரசசார்பற்ற நிறுவனமான பாசிக் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிதியுவிக்கான ஒப்பந்தத்தில் சிறீலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் நொபுஹிட்டோ ஹோபோ – ஜப்பான் தூதுவர் திட்ட இணைப்பாளர் புமி ஈரோ – பாசிக் இம்மாதம் 12ஆம் திகதி கொழும்பிலுள்ள தூதுவருடைய இல்லத்தில் கையொப்பமிடப்பட்டது.
வடக்கில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை காட்டி நிதிதிரட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருகின்றமையும் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவித நிதி உதவியும் சென்றடையாமை ,சிங்கள மக்களின் அபிவிருத்திக்கே இன்று முதன்மையாக செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.