தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெலடியில் மயக்கும் 96 பாடல்!….

நடிகர் விஜய்சேதுபதி – த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’96’.

இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய்சேதுபதியுடன் பணியாற்றிய பிரேம் இயக்கியுள்ளார்.

மெட்ராஸ் எண்டெர்பிரைசஸின் நந்தகோபால் படத்தை தயாரித்துள்ளார்.

கோவிந்த் வசந்த் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள 8 பாடல்களில் 6 பாடல்களை சின்மயி பாடியுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற பேரன்பே காதல்  எனும் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

படம் செப்டம்பர் 13-ம் தேதியன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...