தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.  பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைப்பகுதிக்கு மேல் பகுதியில், காட்டுத் தீ பரவியது.forest-fire

காட்டுத் தீயை கட்டுப்படுத்த  தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர், வன விலங்குகள் வேட்டை தடுப்பு பிரிவு ஊழியர்கள், வனத் தீ தடுப்பு ஊழியர்கள் ஆகியோர் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் இந்த காட்டுத் தீயினால்  மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரியிடம் கேட்ட போது, காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனக்காவலர்கள் மூலம் தொடர்ந்து  நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தெரிவித்தார்.

Comments
Loading...