தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை – சிறீ. இராணுவ தலைமையகம்

2015 ஜனவரிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவலை இராணுவ தலைமையகம் முற்றாக மறுத்துள்ளது. 2009ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நிலைமைகளை கருத்திற்கொண்டு படையினர் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.mukam

இந்தநிலையில் தேவையற்றதென்று கருதப்பட்ட சிறிய வெளியக முகாம்கள் மூடப்பட்டதாக தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2009ஆம் ஆண்டு 07 முகாம்களும், 2010ஆம் ஆண்டு 09 முகாம்களும், 2011ஆம் ஆண்டு 04 முகாம்களும், 2013இல் 17 முகாம்களும், 2014ஆம் ஆண்டு 24 முகாம்களும் மொத்தமாக 59 சிறிய வெளியக முகாம்கள் மூடப்பட்டதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

Comments
Loading...