Designed by Iniyas LTD
யாழில் கஞ்சா கடத்திய இளைஞன் கைது…
யாழ். புங்கன்குளம் பகுதியில் கஞ்சா கடத்திய இளைஞரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
யாழ். அரியாலையை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் பொதி செய்யப்பட்ட 31.7 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவை வானில் எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிபடையில் இளைஞர் பயணித்த வான் சோதனையிடப்பட்டுள்ளது.
சோதனையின்போது வாகனத்திற்குள் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா காணப்பட்டதை அடுத்து, விசேட அதிரடிப் படையினர் வாகனத்தையும் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
அதோடு இளைஞரை கைது செய்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.