தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்நெல்லியடியில் இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

யாழ்நெல்லியடியில்  இரண்டு இளைஞர்கள் மீது நேற்றையதினம் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில்  சென்ற இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுதப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும்  தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை  என்றும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை தாம்  முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...