தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கைத் தீர்மானம்…

எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.

இப்பிரேரணையை  ஐக்கிய தேசிய கட்சி  கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி  திட்டவட்டமாக கூறிவரும் நிலையில்  ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை நாடாளுமன்றத்தில் இவ்வாறான நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக இருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...