தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் அடுத்த 50 ஆண்டுகளில் பாலைவனமாக மாறும் – எச்சரிக்கிறார் சம்பிக்க

அடுத்த 50 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் அரைப் பாலைவனமாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

கொழும்பில் உள்ள அவரது அமைச்சில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ வரும் ஆண்டுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கடுமையான வரட்சியைச் சந்திக்கப் போகின்றன.

புவி வெப்பமயமாதல், இதேநிலையில் தொடருமானால், யாழ்ப்பாணம் அடுத்த 50 ஆண்டுகளில் அரைப் பாலைவனமாக மாறி விடும்.

வடக்கு கிழக்கை தமது பாரம்பரிய தாயகம் என்று உரிமை கொண்டாடுவோர் முதலில், சுற்றாடல் பாதிப்பில் இருந்து தமது நிலங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...