தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரே வரவேண்டுமென போராட்டங்கள் நடத்தியவர்கள் புதிய ஆளுநரிடம் சரணாகதி…

வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரே வரவேண்டுமென போராட்டங்கள் நடத்தியவர்கள் தற்பொழுது புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சரணாகதியாகியுள்ளனர்.

கொழும்பில் புதிய ஆளுநர் இலங்கை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டிருக்கையில்  ரெஜினோல்ட் கூரே  வடமாகாண ஆளுநராக வரவேண்டுமென போராட்டம் நடத்திக்கொண்டிருந்த டெலோ முக்கியஸ்தரான கணேஸ் வேலாயுதம்  மற்றும் முன்னாள் யாழ்.பல்கலைக்கழக முணைவேந்தர் மோகனதாஸ் சகிதம் பலாலிக்கு சென்று புதிய ஆளுநரை வரவேற்றுள்ளனர்.

அதே போன்று முன்னாள் ஆளுநரது வலது கரமாக இருந்த செவ்வேளும் பலாலிக்கு சென்று புதிய ஆளுநரை வரவேற்றுள்ளார் .

இதேவேளை சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் ,சி.தவராசா ஆகியோரும் ஆளுநரை அலுவவலகத்தில் வரவேற்றிருந்தனர்.

அதுமட்டும்மல்லாம யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரும் புதிய ஆளுநரை வரவேற்க  சென்றிருந்ததாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...