தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்….

வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான நாசரின் மகன் சுமன். அவரது தங்கை ரம்யா கிருஷ்ணன் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
ஒரு சாதாரண வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்வதால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத நாசர் பிரபுவை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார்.
அதன் பின்னர் ரம்யா கிருஷ்ணன் பிரபுவை அழைத்துக் கொண்டு இந்தியா வருகிறார். தனது தவறை நினைத்து தினம்தினம் வருத்தப்படும் நாசர், தனது மகள் ரம்யா கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனை தனது பேரனான சிம்புவிடம் சொல்கிறார்.
இவ்வளவு பணம் இருந்தும், தாத்தா நிம்மதியாக இல்லை என்பதை உணரும் சிம்பு, இந்தியா வருகிறார். இந்தியாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார் பிரபு.
கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் பிரபுவின் மகள்கள். பிரபுவின் அபிமானத்தை பெற்று அவர்களது வீட்டில் வேலைக்கு சேரும் சிம்புவுக்கு மேகா ஆகாஷ் மீது காதல் வருகிறது.
கடைசியில், சிம்பு ரம்யா கிருஷ்ணனின் மனதை மாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றாரா? தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைத்தாரா? அத்தை பெண்ணை கரம்பிடித்து ராஜாவாக வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சமீபகாலமாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் சரியாக போகாத நிலையில், செக்கச் சிவந்தவானம் படம் சிம்புக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்பு ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், நகைச்சுவை என அனைத்திலும் பழைய சிம்புவை நினைவுபடுத்துகிறார். சிம்பு ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படமாக இருக்கும் என்பதில் மாற்றமேதுமில்லை.

 

 

Comments
Loading...