தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வலி மேற்கில் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விழிப்புக் குழுக்கள்..

வலி.மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் போதைப் பொருள் பாவனை மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்பு குழுக்களை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி.மேற்குப் பிர­தேச சபை­யின் அமர்வு தவி­சா­ளர் த,நட­னேந்­தி­ரன் தலைமை­யில் சபை மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­றது.

இந்த அமர்­வின் போது 5 தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப் பட்­டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவை  போதைப் பொருள் பாவனை,தனி­யார் கல்வி நிலை­யங்­கள், சிறு­வர் துர்நடத்தைகள், மயா­னங்­கள் சீர­மைப்பு,மயா­னங்­கள் சீர­மைப்பு  ஆகிய தீமானங்கள் தொடர்பில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு , அவற்றினை தடுப்பதற்கான வழிமுறைகளும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக   மேலும் தெரிவிகப்படுகின்றது.

Comments
Loading...