தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் இருவர் அதிரடி கைது….

வவுனியா செட்டிகுளம்   மயில்முட்டையிட்ட குளம் பகுதியில்  வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய போதே குறித்த நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

கைது செய்யபட்டவர்களிடம் இருந்து 50 போத்தல்கள், வடிசாரய போத்தல்கள் கைப்பற்றபட்டதுடன் அதனை உற்பத்தி செய்ய பயன்படும் , நவீன உபகரணங்களையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள்  நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...