தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலை…

வவுனியா  நாகர் இலுப்பைக்குளம் பகுதியில்  12 அடி நீளமான முதலை வீதிக்கு வந்துள்ளதுயா

நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை மக்கள் வீதியில் பயணித்த போது 12 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்டியபோது   கூடிய போது குறித்த முதலை வீதியோரத்தில் இருந்த   பற்றைக்குள் புகுந்துள்ளது.

இதனையடுத்து  பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு  சென்ற வவுனியா பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்துள்ளனர்.

அதைஅடுத்து , வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் முதலை மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...