தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா நகர சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

வவுனியா நகர சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

அங்கு ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கு இடையில் போட்டிநிலைமை நிலவியது.

இன்று நடைபெற்ற தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ராசலிங்கம் கௌதமன் நகரசபையின்  தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

வாக்கொடுப்பில் கௌதமனுக்கு 11 வாக்குகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சேனாதிராஜாவிற்கு 9 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ராசலிங்கம் கௌதமனுக்கு, ஐக்கிய தேசிய கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவளித்தனர்.

வவுனியா நகரசபையின் உபத் தவிசாளராக சிறிலங்கா சுதந்திர கட்சியின் சு.குமாரசாமி தெரிவானார்

Comments
Loading...