தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..

முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட முற்ப்பட்டபோது விடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் முச்சக்கர வண்டி சாரதி உட்ப்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் மேலுமொருவர் தப்பிச்சென்றுள்ளார்

இந்நிலையில் இவர்கள் இருவரும் பொலிஸ் நிலையம் அழைத்துவரப்பட்டு விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துவரும் அதேவேளை இராணுவம் புலனாய்வாளர்கள் என பலர் பொலிஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர் இந்நிலையில் தப்பியோடியவரை பொலிஸ் இராணுவம் இணைந்து காட்டில் தேடுதல் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது

இதேவேளை இந்த  சம்பவத்துடன் தொடர்வுபட்டவர் என்ற சந்தேகத்தில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் தொடர்கின்றன.

அதோடு  முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இராணுவம் பொலிசார் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது

குறித்த சம்பவமானது  சம்பவம் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...