தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வித்தியா கொலை! கைதான பிரதி பொலிஸ்மா அதிபரை அழைத்து சென்ற வாகனம் விபத்து!

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவை, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் வைத்து குறித்த வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க உட்பட மூவர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றதுஎனினும் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரை உரிய நேரத்திற்கு முன்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதற்கமைய எதிர்வரும் 25ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு சற்று நேரத்திற்கு முன்னர் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments
Loading...