Designed by Iniyas LTD
வெள்ளபாதிப்பு நிதி மத்திய அரசுடையது – பிரகாஷ் ஜவடேகர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய உதவி மத்திய அரசு உடையது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக அலுவலகம் அமைந்துள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு பிரதமர் மோடி 2 ஆயிரம் கோடி ரூபாய் அளித்ததாலேயே, 14 லட்சம் பேர் பயனடைந்ததாக கூறினார். ஆனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் நற்பெயர் சம்பாதித்து கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.