தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்பெயின் தாக்குதல்தாரியின் அதிர்ச்சி தரும் வாக்குமூலம்?

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளில் ஒருவர், பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் ஸ்பெயினின் காட்டலோனியா நகரில் 15 பேரை பலி வாங்கிய தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இஸ்லாமியவாத தீவிரவாதிகள் மேட்ரீட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நான்கு பேரும் வட ஆபிரிக்காவைப் பூர்வீகமாக கொண்டவர்கள்.

அந்தச் சம்பவத்தில் அவரின் கூட்டாளிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்து அந்த குழுவின் திட்டத்தை மாற்றியது.

குறித்த வெடி விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால் அவர்களின் திட்டம் மிகக் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என வாக்குமூலத்திலிருந்து தெரியவந்துள்ளதாக  நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Comments
Loading...