தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அகதிகளுக்கு உதவ முன்வந்துள்ள ஜெர்மனி கால்பந்து அணி!

சிரியா நாட்டுச் சிறுவன் ஆயலான் கடற்கரை ஓரத்தில் இறந்து கிடந்த புகைப்படம் வெளியானதையடுத்து, ஜெர்மனியில் கால்பந்து ரசிகர்கள், அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன், ரசிகர்கள் போட்டியை காண வருகின்றனர்.

boy

இந்த புகைப்படம் வெளியான அடுத்த நாளே, ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து அணியான பேயர்ன்மியூனிச்,  ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.  நட்புமுறையிலான போட்டிகளில் பங்கேற்று, அதில் வரும் நிதியையும் அகதிகள் நல்வாழ்வுக்காக  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

fcb

ஜெர்மனி பந்தஸ்லீகா தொடரில், வரும் 12ஆம் தேதி பேயர்ன்மியூனிச் அணி,  எப்.சி. ஆக்ஸ்பர்க் அணியுடன் மோதுகிறது. மியூனிச் நகரின் ஏலியன்ஸ் அரானவில் நடைபெறும் இந்த போட்டியின் போது, அயலான் இறப்பை நினைவு கூறும் வகையில், ஜெர்மனி நாட்டு குழந்தைகளுடன், அகதிகளின் குழந்தைக ளும் வீரர்களை  மைதானத்திற்குள் அழைத்து வர உள்ளனர். அகதிகளையும், அவர்களின் குழந்தைகளையும் அரவணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜெர்மனியில் ஏற்கனவே உள்ள அகதிகள் நல்வாழ்விற்காகவும், அவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக உதவவும் பேயர்ன்மியூனிச் அணி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. அகதிகளின் குழந்தைகள் விரும்பினால்,  கால்பந்து பயிற்சி அளிக்கவும் பேயர்ன் முடிவு செய்துள்ளது.

Comments
Loading...