Designed by Iniyas LTD
அகில இலங்கைப்பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தங்கப்பதக்கம் ….
அகில இலங்கைப்பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 20 வது வயது கோலூன்றிப் பாய்தலில் செல்வன் அ.புவிதரன் 4.55m உயரம் தாண்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெறும் மெய்வல்லுனர் போட்டிகளில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி தேசிய ரீதியில் சாதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது
