Designed by Iniyas LTD
அக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் ..
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கறுப்புத் துணியால் முகத்தை மூடி சென்ற சிலர் திட்டமிட்ட வகையில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்த தாக்குதல் தொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

