Designed by Iniyas LTD
அங்குரார்ப்பண நிகழ்வுகளில் மோடி!
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை ஆரம்பமான சர்வதேச வெசாக் தின அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய , நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ , ஐக்கிய நாடுகள் வைபவ அதிதிகள் விளக்கினை ஏற்றி வைத்தனர். இதனை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானதுடன், மல்வத்த மாகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் பஞ்சசீல வழிபாட்டு நிகழ்வை நிகழ்த்தினார்.