தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி6 பிளே ரென்டர்!

மோட்டோரோலாவின் பிளே சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு வெளியிடாமல், பிளே சீரிஸ் போன்களுக்கு மாற்றாக புதிய எஸ் சீரிஸ் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் எஸ் வெர்ஷன் அறிமுகம் செய்தது.

ஒரு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் பிளே சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த வகையில் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. முன்னதாக மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதிய ரென்டர்களில் வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் இதன் பெசல்கள் மற்ற ஸ்மார்ட்போன்களை போன்று மெல்லியதாக இல்லை. முன்பக்கம் ஹோம் பட்டன் நீக்கப்பட்டிருக்கிறது.

முன்பக்கம் நோட்டிஃபிகேஷன் எல்இடி, சென்சார்கள், செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படாமல், இருபக்கங்களிலும் வளைந்திருப்பதால் கைகளில் நழுவாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை வழங்க வட்ட வடிவத்தில் மோட்டோரோலா எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாமல், சென்சாப் மற்றும் பிளாஷ் உள்ளிட்டவை வழங்கியுள்ளது. கேமராவின் கீழ் மோட்டோரோலா லோகோ மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி6 பிளே சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.7 இன்ச் 1440×720 பிக்சல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி6 பிளே ரென்டர் வீடியோவை கீழே காணலாம்..,

Comments
Loading...