Designed by Iniyas LTD
அடிப்படை வசதிகளின்றி கிளி பொன்நகர் பாடசாலை
கிளிநொச்சி பொன்நகர் சிவபாத கலையகம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கி வருகின்றது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தளபாடப் பற்றாக்குறையால் நிலத்திலிருந்தும் பாடசாலைக் கதவுகளை மேசையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தரம் 1 இலிருந்து 11 வரையான வகுப்புக்கள் நடைபெறுவதுடன், சுமார் நானூறு வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவ்வருடம் இப்பாடசாலையிலிருந்து 4 மாணவர்கள் க.பொ.த.உ.தரத்திற்குத் தெரிவாகி யமையும் குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் விளையாடும் மைதானம் கால்நடைகளின் மேச்சல் தரையாகக் காணப்படுவதுடன் மலசலகூடங்களுக்கு கதவுகள்கூட அற்ற நிலையிலேயே இப்பாடசாலை இயங்குகின்றது. இப்பாடசாலையின் நூலக அறையானது பிள்ளைகளின் சாப்பாட்டறையாகப் பயன்படுத்தப்படுவதுடன், இம்மாணவர்களுக்கு விளையாடுவதற்குக்கூட எந்தவொரு உபகரணங்களும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இப்பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்களைப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டுமென்பதே இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் விருப்பமாகும்.