Designed by Iniyas LTD
அடைமழையினால் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 688 குடும்பங்கள் பாதிப்பு..
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு குடும்பங்கள் நீரில் மூழ்கி பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கி பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர் .
அந்தவகையில் 688 குடும்பங்களை சேர்ந்த 2244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 599 குடும்பங்களை சேர்ந்த 1908 பேர் 16 இடைத்தங்கல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


